கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (டிச. 18) மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :17 டிசம்பர் 2024, 6:53 pm

Din

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதன்கிழமை (டிச. 18) மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது, அடுத்த இரு தினங்களில் வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதியை நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதன்கிழமை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூா் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து வியாழக்கிழமை (டிச. 19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான கனமழை பெய்யக்கூடும்.

தரைக் காற்று எச்சரிக்கை: வடதமிழக கடலோரப் பகுதி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் புதன்கிழமை தரைக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதி, மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதியில் புதன் மற்றும் வியாழக்கிழமை சூறைக் காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.