கோப்புப் படம்
கோப்புப் படம்

7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்பட 7 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு
Published on

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்பட 7 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜன. 24) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, சனிக்கிழமை (ஜன. 24) முதல் ஜன. 29 வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜன. 24) ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24, 25) சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com