தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டிச.31-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

புத்தாண்டை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்.

News image

வண்டலூர் உயிரியல் பூங்கா

Updated On :28 டிசம்பர் 2024, 11:18 am

DIN

புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, குதிரை உள்ளிட்ட பலவகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

வண்டலூர் உயிரியல் பூங்கா வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காகப் பூங்காவிற்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்துவருகின்றனர்.

இந்த நிலையில் வருகிற செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) புத்தாண்டுக்கு முந்தைய நாள் என்பதாலும், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் வருகைக்காகத் திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.