போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி: பிரதமர் மோடி உறுதிஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷியா ஆதரவுசெஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்கள்: என்டிஏ அலுவலகத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்புதமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு!

தமிழ்நாட்டில் செயலாளர்கள் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு.

கோப்புப் படம்

Published On :

தமிழ்நாட்டில் செயலாளர்கள் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உமாநாத் ஐஏஎஸ் முதல்வரின் முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 10க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்புச் செயலாளர்கள், ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை நல ஆணையரான ஆசியா மரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கே.எஸ்.கந்தசாமி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராகவும், இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் (சென்னை) ஆணையராக பொன்னையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2001 ஆம் ஆண்டைச் (பேட்ஜ்) சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மைச் செயலர் அந்தஸ்து அளவில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.