பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அண்ணா பல்கலை. விவகாரம்: மகளிர் ஆணையம் இன்றும் விசாரணை!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை நடத்துகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :31 டிசம்பர் 2024, 2:42 am

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை நடத்துகிறது.

அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்களிடம் நேற்று 7 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது.

விசாரணை முழுமையாக நிறைவடைந்த பிறகு, அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மகளிர் ஆணையக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவில் உள்ள மம்தா குமாரி, பிரவீன் தீக்சித் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணையை தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.

வளாகத்தில் வன்கொடுமை

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி (எஃப்.ஐ.ஆர்.) பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.