6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மன்னார்குடியில் தவெக பதாகைகள் அகற்றம்!

தவெகவின் சார்பில் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றியது பற்றி..

News image
தவெக பதாகைகள் அகற்றம்
Updated On :31 டிசம்பர் 2024, 6:51 am

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தவெகவின் சார்பில் வைக்கப்பட்ட பதாகைகளை காவல்துறையினரின் அறிவுறுத்தலை அடுத்து கட்சியினரே செவ்வாய்க்கிழமை அகற்றினர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அன்புத் தங்கைகளே என்று பெண்கள் பாதுகாப்பு முன்னிறுத்தி தனது கைப்பட எழுதிய கடிதத்தினை பதாகையாக தயாரித்து, செவ்வாய்க்கிழமை காலையில் மன்னார்குடியில் தேரடி, பாலகிருஷ்ணாநகர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வஉசி சாலை தனியார் மேல்நிலைப்பள்ளி,அரசுக் கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் மரகம்பு சாரம் அமைத்துக் கட்டி வைத்திருந்தனர்.

இதுகுறித்து, மன்னார்குடி காவல்துறையினர் தவெகவினரிடம் காவல்துறையில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது எனவும் இவற்றை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, தவெக மாவட்ட நிர்வாகி ராஜராஜன் உள்ளிட்ட கட்சியினர் நகரின் நான்கு இடங்களில் வைத்திருந்த பதாகைகளைச் சிறிது நேரத்தில் தாங்களாகவே அகற்றி எடுத்துச்சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.