‘15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்’: நிர்மலா சீதாராமனை விமர்சித்த மதுரை எம்பி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில் சிறு திருத்தம் இருப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2024-25-ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். சுமார் 57 நிமிடங்கள் பட்ஜெட்டின் மீது அவர் உரையாற்றினார்.

மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு பொறுப்பேற்கும் புதிய அரசு, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பதால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

நிதிநிலை அறிக்கை செய்து பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 7 ஐஐடிகள், 15 எய்ம்ஸ்கள் கட்டப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதனை விமர்சனம் செய்த சு.வெங்கடேசன், “சிறு திருத்தம், 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்” என்று எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com