கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அண்ணாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

ஸ்பெயின் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு.க. ஸ்டாலின், அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு  மரியாதை செலுத்தினார். 

News image
Updated On :3 பிப்ரவரி 2024, 5:44 am

அண்ணா நினைவுநாளையொட்டி அறிஞர் அண்ணா படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயினிலிருந்தவாறு மரியாதை செலுத்தினார். 

ஸ்பெயின் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு.க. ஸ்டாலின், அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு  மரியாதை செலுத்தினார். 

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள்!

இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு மத்தியில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்!

எண்ணித் துணிக கருமம்! என்றென்றும் அண்ணா எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.