
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு மக்கள் தங்களின் கருத்துகளை அனுப்பலாம் என திமுக இன்று (பிப். 3) அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியியிட்டுள்ள அறிக்கையில், எழுத்துப்பூர்வமாக, தொலைப்பேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வாயிலாகத் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் திமுக தேர்தல் அறிக்கைக் குழு பயணிக்க உள்ளதால் நேரடியாகவும் மக்கள் கருத்துகளைக் கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக பிப்ரவரி 25 வரை பொதுமக்கள் தங்களின் கருத்துகளைத் தெரியப்படுத்தலாம்.
தேர்தல் அறிக்கை தொடர்பாக #DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் சமூகவலைதளத்தில் கருத்துகளை பதிவு செய்யலாம்.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in-இற்கு மின்னஞ்சல்கள் அனுப்புவதன் மூலமாகவோ உங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
நேரடியாக தொலைபேசியில் அழைத்து கருத்துகளைத் தெரிவிப்பதற்காக 08069556900 -இல் ஒரு சிறப்பு ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி எண் தொடர்பு மூலம் திமுக தேர்தல் அறிக்கை குழு உங்கள் பரிந்துரைகளை அறிந்து கொள்ளத் தயாராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.