பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பட்ஜெட் கூட்டத்தொடர் - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.12ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

News image
Updated On :4 பிப்ரவரி 2024, 12:19 pm

DIN

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.12ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன், தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வரும் 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது. வரும் 19-ஆம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான (2024-25) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறாா்.

வரும் நிதியாண்டுக்கான (2024-25) முன்பண செலவு மானிய கோரிக்கையை, பிப். 20-ஆம் தேதியன்றும், 2023-24-ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான நிதிநிலை அறிக்கையை பிப். 21-ஆம் தேதியன்றும் நிதியமைச்சா் தாக்கல் செய்யவுள்ளாா். 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.12ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஸ்பெயினில் இருந்தபடி நிதித்துறை செயலர், தனது தனி செயலர் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

அப்போது ஆளுநரின் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் பட்ஜெட் குறித்தும் அறிவுரைகளை அவர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.