திமுக குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.


நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் மே மாதத்துடன் நிறைவவதால், அதற்கு முன்பு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனையொட்டி மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டில் திமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளுக்கு தொகுதிகளை வரையறை செய்ய அக்கட்சி சார்பில் தொகுதிப் பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிகளை வரையறை செய்யும். அந்தவகையில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
திமுக முதன்மைச் செயலர் கேஎன்.நேரு தலைமையில், அமைப்புச் செயலர் ஆர்எஸ். பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திமுக இளைஞரணி செயலர் உதயநிதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். அப்போது நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் முதல்வர் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற தேர்தல் குழுவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...