காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 97 கன அடியாக சரிந்துள்ளது.
இந்த நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 6,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைய தொடங்கியது.
நேற்று காலை 70.42 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 70.05 அடியாக குறைந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 0.37 அடி குறைந்துள்ளது.
தற்போது அணையின் நீர் இருப்பு 32.74 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்த கடும் வறட்சியான சூழலில், அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை காலம் வரை மேட்டூர் அணை காவிரியில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலை நீடித்தால் அடுத்த நீர்ப்பாசன ஆண்டில் குறித்த நாளில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: நேபாள நாட்டைச் சேர்ந்தவர் பலி!

சர்தார் 2 படத்தின் டீசர் அப்டேட்..! மகிழ்ச்சியில் கார்த்தி ரசிகர்கள்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட பும்ரா தயார்!
சசிகுமாரின் வதந்தி - 2 டிரைலர்!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament


