மநீம கட்சியுடன்  பேச்சுவார்த்தை - முதல்வர் முடிவெடுப்பார்: அமைச்சர் ஐ.பெரியசாமி

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மநீம கட்சியுடன்  பேச்சுவார்த்தை - முதல்வர் முடிவெடுப்பார்: அமைச்சர் ஐ.பெரியசாமி

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்வர் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். என்றார். சமீப காலமாக திமுகவுடன் நெருங்கிய நட்பில் கமல்ஹாசன் உள்ளார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் மே மாதத்துடன் நிறைவவதால், அதற்கு முன்பு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனையொட்டி மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டில் திமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளுக்கு தொகுதிகளை வரையறை செய்ய தொகுதிப் பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழு கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிகளை வரையறை செய்யும். அந்தவகையில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்து திமுக குழு, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பிப்.12ஆம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com