பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

2024 மக்களவைத் தேர்தலில் விஜய் கட்சி போட்டியிட்டிருக்கலாம்: செ.கு.தமிழரசன் பேட்டி

வரும் மக்களவைத் தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டியிட்டிருக்கலாம் என இந்திய குடியரசு கட்சிஜ தலைவர் செ.கு. தமிழரசன் தெரிவித்தார்.

News image
Updated On :4 பிப்ரவரி 2024, 2:56 pm

DIN

காஞ்சிபுரம்: வரும் மக்களவைத் தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டியிட்டிருக்கலாம் என இந்திய குடியரசு கட்சிஜ தலைவர் செ.கு. தமிழரசன் தெரிவித்தார்.

தலித் விரோத நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தும், ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் அரசாக திமுக செயல் பட்டு வருகிறது என இந்திய குடியரசு கட்சிஜ தலைவர் செ.கு. தமிழரசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

டாக்டர் அம்பேத்கரின் 67 ஆவது நினைவு நாளையொட்டி இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கும் விழா காஞ்சிபுரம் மண்டபத்தில் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான செ.கு. தமிழரசன் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் அயோத்திதாசர் விருது-கார்மேகம், சிவராஜ் விருது-காரல் மார்க்ஸ் சித்தார்த், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் விருது-செந்தமிழ் சரவணன், அன்னை மீனாம்பாள் சிவராஜ் விருது-சபிதா முனுசாமிக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவிற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த செ.கு.தமிழரசன், மத்திய அரசு கடந்த 10 ஆண்டு காலமாக வறுமை ஒழிக்கப்படும், அனைவருக்கும் கழிவறை எனக் கூறிய நிலையில் தற்போது வரை இந்த திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழகம் முதல் இடம் வருகிறது. கடந்த 15 மாதங்களாக வேங்கை வயல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை என்பதும் இதற்கு உதாரணம்.

தலித் விரோத நடவடிக்கைகளை உற்சாகப் படுத்துகின்ற,  ஊக்குவிக்கின்ற, அவர்களைப் பாதுகாக்கும் வேலியாக  திமுக அரசு செயல்பட்டு வருகிறது என கடும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

சனாதன கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை உடைய நாங்கள், எங்களது கோரிக்கைகளை செவி மடுக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என அவர் கூறினார்.

மேலும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலேயே நடிகர் விஜய் கட்சி போட்டியிட்டிருக்கலாம் என தமிழரசன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.