மாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மோடியின் வெற்றிக்காக செயல்படுகிறோம்: ஓபிஎஸ்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2024, 8:38 am

DIN

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மதுரையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேசியது: 

“அதிமுக கொடியை நான் பயன்படுத்தக் கூடாது என்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த தொண்டர்கள்தான் கொடியை பயன்படுத்தியுள்ளார்கள். அதிமுக என்பது எனது ரத்தம். இதனை மாற்றுவதற்கு தீர்ப்பு வழங்க முடியாது.

கடந்த 10 ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மீண்டும் மோடிதான் பிரதமர் ஆவார். ஏற்கெனவே நாங்கள் பாஜகவின் கூட்டணியில் செயல்பட்டுள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதில்லை. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம். 

ஈரோடு இடைத்தேர்தலில் தற்காலிகமாகதான் இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு கொடுக்கப்பட்டது. மீண்டும் நாங்கள் உரிமை கோருவோம். இரட்டை சிலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.