தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு

தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளையைப் பிடிக்க முயலும் வீரர்கள்
தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளையைப் பிடிக்க முயலும் வீரர்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு விழா இன்று(பிப்.6) செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட 700 காளைகளில் ஒவ்வொன்றாகத் திறந்துவிடப்படுகின்றன. இக்காளைகள் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களின் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலுக்கு அனுமதிக்கப்படுகிறது.

இக்காளைகளைப் பிடிக்க மொத்தம் 400 வீரர்கள் பதிவு செய்தனர். இவர்கள் 50 பேர் வீதம் களமிறக்கப்பட்டனர்.குறிப்பிட்ட எல்லை வரை மாட்டைப் பிடித்து சென்றவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்து, அவர்களுக்கு சைக்கிள், பீரோ, சில்வர் பாத்திரம், மின் விசிறி, குத்துவிளக்கு, கட்டில், நாற்காலி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மாடுகள் பிடிபடவில்லை என்றால், அப்பரிசு மாட்டின் உரிமையாளருக்கு அளிக்கப்படும்.

இவ்விழாவில் கோட்டாட்சியர் செ. இலக்கியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com