சென்னையில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில், அண்ணாநகர், ஜெ.ஜெ. நகர், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் மூன்று தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டுள்ளது.
னியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
னியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெற்றோர் அச்சம் அடைந்தனர்.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் சார்பில், அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் தகவல் அனுப்பி, பள்ளிக்கு வந்து மாணவர்களை அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

சென்னை அண்னாநகர், பாரிமுனை, கோபாலபுரம், திருமழிசை, ஆர்.ஏ.புரம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 15-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியோடு பள்ளிகளுக்குச் சென்று வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் நிறைவில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இயங்கும் பள்ளிகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகங்களுக்கு தொடர்ந்து மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. தற்போது சென்னை சாஸ்த்ரி பவன் பகுதியில் இயங்கும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் பெற்றோர்  குவியத் தொடங்கினர். இதனால், பள்ளி இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகளைப் பார்த்தவர்களும் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலையில், மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com