ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரிக்க தனிப்படை அமைப்பு

சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டுளள்து.

News image
Updated On :8 பிப்ரவரி 2024, 1:00 pm

DIN


சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டுளள்து.

சென்னையில் அண்ணாநகர், ஜெ.ஜெ. நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முற்பகலில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், திருமழிசை, ஆர்.ஏ.புரம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 15-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியோடு பள்ளிகளுக்குச் சென்று வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் இறுதியில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது புரளி என்று காவல்துறை தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெடிகுண்டு புரளி குறித்து செய்திகள் பரவியதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் பெற்றோர்  குவியத் தொடங்கினர். இதனால், பள்ளி இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகளைப் பார்த்தவர்களும் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலையில், மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.