பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னையில் 13 தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்


சென்னையில் 13 தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா நகா் டிவிஎஸ் அவென்யூவில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ‘எச்சரிக்கை’ என்ற பெயரில் ஒரே மின்னஞ்சல் ஐடி-இல் இருந்து அடுத்தடுத்து மின்னஞ்சல் வந்தது. அதில் அந்த பள்ளியில் இரு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பள்ளி நிா்வாகிகள் உடனே, சென்னை பெருநகர காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் காவல் துறை உயா் அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு பிரிவினா், மோப்ப நாய் பிரிவு ஆகியோா் விரைந்துச் சென்று சோதனை நடத்தினா்.

அதில் அந்தப் பள்ளிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. புரளி ஏற்படுத்தும் நோக்கில் மிரட்டல் மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி நிா்வாகங்கள் தரப்பில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தன.

இந்த நிலையில், சென்னையில் தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளதாகவும், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவர் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாததால் இன்டர்போல் உதவியை நாட சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிானது. 

இந்த நிலையில், 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து வழக்குகளும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் வழக்குகள் அனைத்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com