பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது!

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் ஆரம்பத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி அதிருப்தி தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக ஆளுநர் உரையின் மொழிபெயர்ப்பை வாசிக்கும்போது சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று (பிப்.12) காலை 10 மணியளவில் தொடங்கியது.

சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர். என். ரவி சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
இயற்கை பேரிடரை தமிழக அரசு திறம்பட கையாண்டது

எனினும், ஆளுநர் தனது உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடங்களில் முடித்தார். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் ஆரம்பத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டுள்ளது. அரசின் உரையில் உள்ள பல பகுதிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரத் என்று தனது உரையை ஆளுநர் முடித்தார்.

கடந்த ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சில சொற்களைத் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது, ''பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளின்போது தமிழ்நாடு திறம்பட செயல்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு ஒருபோதும் அமல்படுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்.

1.15 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்குகிறோம். புதுமைப்பெண் திட்டத்தின் எதிரொலியாக உயர்கல்வியில் பெண்கள் சேர்வது 35% அதிகரித்துள்ளது.

2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை பல்வேறு வகைகளில் மத்திய அரசு புறக்கணிக்கிறது என தனது உரையில் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com