மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

இயற்கை பேரிடரை தமிழக அரசு திறம்பட கையாண்டது

மிக்ஜம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்பை தமிழக அரசு திறம்பட கையாண்டதாக ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2024, 5:13 am

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என். ரவியின் உரையுடன் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், தமிழ்நாடு ஆளுநரின் கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு ஆளுநர் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்தார்.

ஆளுநருக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் “வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய்பாரத்” எனக் குறிப்பிட்டு 2 நிமிடங்களில் உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். அதில், “மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை தமிழக அரசு திறம்பட கையாண்டது.

புயலால் பாதிக்கப்பட்ட 24.02 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 வழங்கப்பட்டது. 1.15 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக்காட்டியது பெருமை அளிக்கிறது. உலக முதலீட்டார் மாநாடு சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.