ஆளுநருக்கு எதிர்ப்பு: கருப்புப் பட்டையுடன் காங். எம்எல்ஏக்கள் வருகை
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்புப் பட்டை அணிந்து சட்டப்பேரவை கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர்.


நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது.
புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி முதல் நாளில் உரையாற்றுகிறார். பிப்.19-ஆம் தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்புப் பட்டை அணிந்து சட்டப்பேரவை கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர்.
மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சிய நிலையில், ஆளும் கட்சி, எதிா்க்கட்சிகளுக்கு இந்தக் கூட்டத் தொடா் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
ஆளுநா் உரை மற்றும் அவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாத நிகழ்வுகள் 4 நாள்களுக்கு நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...