ஆளுநர் வாசிக்காத உரையை பதிவு செய்ய பேரவையில் தீர்மானம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காத அரசு தயாரித்த கொள்கை உரையை பேரவைக் குறிப்பில் பதிவேற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று (பிப்.12) காலை 10 மணியளவில் தொடங்கியது.
எனினும், ஆளுநர் தனது உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடங்களில் முடித்தார். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் ஆரம்பத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். “தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டுள்ளது. அரசின் உரையில் உள்ள பல பகுதிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது“ என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரத் என்று தனது உரையை ஆளுநர் முடித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஆளுநருக்கு தயாரித்த கொடுத்த கொள்கை உரையை, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தமிழில் முழுவதுமாக வாசித்தார்.
இதையடுத்து, தமிழக ஆளுநரின் கருத்துகளை நீக்கவும், அரசு தயாரித்து குறித்த உரை மட்டும் சட்டப்பேரவைக் குறிப்பில் முழுவதுமாக பதிவிட அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைல் கூட்டம் நிறைவடைவதற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...