விஜயகாந்த் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
விஜயகாந்த் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம், நிதிநிலை அறிக்கை நிறைவேற்றத்துக்காக ஏழு நாள்கள் பேரவை கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்காக சட்டப் பேரவை இன்று கூடி நடைபெற்று வருகிறது.

அண்மைக் காலத்தில் காலமான முக்கிய பிரமுகா்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.க. செல்வம், துரை ராமசாமி உள்ளிட்டோருக்கும், முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவிக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்கும். இந்த விவாதம் புதன்கிழமையும் (பிப். 14) தொடா்ந்து நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com