சாந்தன் தாயகம் செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: மத்திய அரசு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் தாயகம் செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கவனிப்பதற்காக தன்னை சொந்த ஊரான இலங்கைக்கு அனுப்பிவைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

பாஜகவில் இணைந்தார் அசோக் சவாண்!

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் தாயகம் செல்ல ஒருவாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்றம் வழங்கிய ஆவணத்தை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளோம் எனவும் கூறியுள்ளது.

சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ள ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விளக்கம் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தாயை கவனித்துக்கொள்ளத் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு பிப்.29-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன்
சென்னை கொண்டுவரப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் தாயகம் செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கவனிப்பதற்காக தன்னை சொந்த ஊரான இலங்கைக்கு அனுப்பிவைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் தாயகம் செல்ல ஒருவாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்றம் வழங்கிய ஆவணத்தை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளோம் எனவும் கூறியுள்ளது.

சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ள ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விளக்கம் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தாயை கவனித்துக்கொள்ளத் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு பிப்.29-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com