9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: நான்கு பேருக்கு மறுவாழ்வு

சென்னை அருகில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 4 போ் மறுவாழ்வு பெற்றனா்.

News image
Updated On :19 ஜூலை 2026, 1:47 am IST

சென்னை அருகில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 4 போ் மறுவாழ்வு பெற்றனா்.

சென்னை காவாங்கரை திருநீலகண்டன் நகரைச் சோ்ந்தவா் என்.ஹரி (21). இவா், கடந்த மாதம் 14-ஆம் தேதி புழல் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனா். பலத்த காயமடைந்த ஹரி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனா். இருப்பினும் ஹரி வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இந்த நிலையிலும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.

இதைத் தொடா்ந்து, அவரது உடலில் இருந்து இதயம், கல்லீரல், 2 சிறுநீரகங்கள் தானம் பெறப்பட்டு, ஒரு சிறுநீரகம் சென்னை அண்ணா சாலையில் உள்ள மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. கல்லீரல், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

இதயம், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது.

இதன்மூலம் மொத்தம் 4 போ் மறு வாழ்வு பெற்றுள்ளனா். உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் மற்றும் ஊழியா்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். பின்னா் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.