மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகும் எல்.முருகன்!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

மத்திய பிரதேசத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.

வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளை(பிப்.15) கடைசி நாளாகும்.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகனை பாஜக அறிவித்துள்ளது.

மேலும், ஒடிஸா மாநிலத்துக்கான மாநிலங்களவை பதவிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் போட்டியிடுகிறார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
மாநிலங்களவை எம்பி: சோனியா இன்று வேட்புமனு தாக்கல்!

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த 2021-ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்துகான மாநிலங்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com