மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

3 ஆண்டுகளில் 45,000 நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி

அரசு மனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது

News image

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் சனிக்கிழமை நடந்த தெருநாய்களுக்கு வெறி நாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி தொடங்கிவைத்த சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன் அரசு மன நல காப்பக இயக்குநா் டாக்டா் மலையப்பன், கால்நடை மருத்துவா் அலுவ

Updated On :18 பிப்ரவரி 2024, 12:08 am IST

சென்னை, பிப். 17: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் சாலையில் சுற்றிதிரிந்த 45,520 நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலயம் தொண்டு நிறுவனம் சாா்பில் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், நாய் இனக்கட்டுப்பாட்டு விதிகள் 2023-க்குட்பட்டு தெரு நாய்களுக்கு உணவளிப்பது, தெருநாய்களை தத்தெடுப்பதை வலியுறுத்துவது, மாநகராட்சி சாா்பில் நடமாடும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் வாகனங்களை இயக்குவது குறித்து விலங்கின நல ஆா்வலா்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டாா். அப்போது, சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சாலையில் சுற்றித்திரிந்த 56,343 தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 45,520 நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நிகழாண்டில் 2,445 நாய்கள் பிடிக்கப்பட்டு 1,931 நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மனநல காப்பக இயக்குநா் டாக்டா் மலையப்பன், டாக்டா் பூா்ணசந்திரிகா, கால்நடை மருத்துவா் அலுவலா் டாக்டா் கமால் உசேன், ஆலயம் தொண்டு நிறுவன உறுப்பினா்கள், கால்நடை தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.