ரூ.15.34 கோடியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

ரூ.15 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளர்களுக்கான 13 குடியிருப்பு புதிய கட்டடங்களை சனிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில்,ரூ.15 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை சனிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில்,ரூ.15 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை சனிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில்,ரூ.15 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை சனிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (பிப்.17) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், ரூ.15 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர்

அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது “காக்கும் பணி, எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும்.

மேலும், பேரிடர் காலங்களில் மக்களை மீட்டெடுக்கும் பணிகளையும் இந்த துறை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கிய பணிகளை ஆற்றி வரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பணிகள் சிறக்க கடந்த இரண்டரை ஆண்டுகளில்

முதல்வர் ரூ.28.43 கோடி செலவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 168 குடியிருப்புகள், ரூ.23.10 கோடி செலவில் 16 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள், ரூ.2.45 கோடி செலவில் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.53.98 கோடி செலவிலான கட்டடங்களை திறந்து வைத்துள்ளார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில்,ரூ.15 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை சனிக்கிழமை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 8 பேர் பலி

அதன் தொடர்ச்சியாக இன்று, திருவண்ணாமலை மாவட்டம் – சேத்துப்பட்டில் 2 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள்; கடலூரில் 4 கோடியே 43 இலடசம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடியில் ரூ.2 கோடியே 74 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள இரண்டு மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்; கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவிலும், ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டையில் ரூ.1 கோடியே 48 லட்சம் செலவிலும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரூ.2 கோடியே 14 லட்சம் செலவிலும், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் ரூ.94 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள நான்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள்; என மொத்தம் ரூ. 15 கோடியே 34 லட்சம் செலவிலான தீயணைப்பு மற்றும்

மீட்புப் பணிகள் துறைக்கான கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா. விசுவநாதன்,தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுலவர்களும், கடலூர் மாவட்டத்திலிருந்து சட்டப்பேரை உறுப்பினர் கோ. அய்யப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ. அருண் தம்புராஜ், மேயர் திருமதி சுந்தரி ராஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுலவர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com