2030க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்: தமிழக பட்ஜெட்
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: தமிழகத்தில் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் கிராமப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுளள்து.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வரும் 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் எனறு பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பட்ஜெட் உரையில்,
குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் அறிமுகம்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு. 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும்.
சிங்காரச் சென்னை 2 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு.
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
பூவிருந்தவல்லியில் ரூ.500 கோடியில் திரைப்பட நகரம்.
அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு.
காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளை புனரமைக்க திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு.
கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.
மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
முதல்வரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ.1000 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
5000 நீர்நிலைகளை புனரமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது, ரூ.500 கோடியில் 5000 ஏரிகள், குளங்கள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வறுமையில் உள்ளவர்களை மீட்டெடுக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...