இன்னுயிர் காப்போம் சிகிச்சைக்கான உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு: பட்ஜெட்
புதிய புற்றுநோய் மேலாண்மை இயக்கம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் ஒரு புதிய புற்றுநோய் மேலாண்மை இயக்கத்தை தமிழக அரசு செயல்படுத்தும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 - 25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
அந்த அறிவிப்பில்,
மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ரூ.243 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மருத்துவக் காப்பீட்டினைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பை 50 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இங்கு உயர் சேவைகளை வழங்க காப்பீட்டுத் தொகுப்பு நிதியிலிருந்து ரூ.200 கோடி செலவிடப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்ச வரம்புத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
இராமேஸ்வரம், செந்துறை, திருப்பெரும்புதூர், அரக்கோணம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், தேனி மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், 50 படுக்கை கொண்ட 6 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
தமிழகத்தில் ஒரு புதிய புற்றுநோய் மேலாண்மை இயக்கத்தை தமிழக அரசு செயல்படுத்தும். அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான உயர்தர சிகிச்சைக்காக கூடுதல் உயர்நிலை புற்றுநோய்க் கருவிகள் வழங்கப்பட்டு அதை உயர்திறன் மையமாக தரம் உயர்த்தப்படும்.
25 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு போதைப் பழக்க மீட்பு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...