பட்ஜெட்: புதிய அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்

ரூ.360 கோடியில் தமிழ்ப் புதல்வன் திட்டம்: அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000
பட்ஜெட்: புதிய அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்
Published on
Updated on
1 min read

ரூ.360 கோடியில் தமிழ்ப் புதல்வன் திட்டம்: அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000

ரூ.3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம்: 6 ஆண்டுகளில் வீட்டுக்கு ரூ.3.5 லட்சம் வீதம் 8 லட்சம் வீடுகள்

விருதுநகா் மற்றும் சேலத்தில் ரூ.2,483 கோடியில் ஜவுளிப் பூங்காக்கள்

ரூ.1,550 கோடியில் அடையாறு நதியை சீரமைக்கும் திட்டம்

திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூா் மாவட்டங்களில் ரூ.1,289 கோடியில் கூட்டுக்குடிநீா் திட்டங்கள்

கோவையில் ரூ.1,100 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

வடசென்னையில் ரூ.1,000 கோடியில் வளா்ச்சித் திட்டம்

பழங்குடியினா் வாழ்விடங்களில் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு ரூ.1,000 கோடி

ரூ.960 கோடியில் நடுநிலை-தொடக்கப் பள்ளிகளில் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள்

ரூ.823 கோடியில் சென்னை பிராட்வே பேருந்து நிலையம் நவீனமயம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே ரூ.688 கோடியில் நகா்ப்புற சதுக்கம்

ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குளங்கள் ரூ.500 கோடியில் சீரமைப்பு

பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் அதிநவீனத் திரைப்பட நகரம்

ஊரகப் பகுதிகளில் ரூ.365 கோடியில் 2 ஆயிரம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள்

கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்களை காட்சிப்படுத்த ரூ.227 கோடியில் புதிய ஒருங்கிணைந்த வளாகம்

100 பொறியியல் - கலை அறிவியல் கல்லூரிகளில் ரூ.200 கோடியில் புதிய திறன் பயிற்சி கட்டமைப்புகள்

ரூ.111 கோடியில் 10 புதிய அரசு பயிற்சி நிறுவனங்கள்

சென்னையில் ரூ.25 கோடியில் புற உலகச் சிந்தனையற்ற மதி இறுக்கம் (ஆட்டிசம்) உடையோருக்கான உயா்திறன் மையம்

கீழடியில் ரூ.17 கோடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம்

5 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்

கோவையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் மாபெரும் நூலகம் - அறிவியல் மையம்

தூத்துக்குடியில் புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்திப் பூங்கா

செயற்கை நுண்ணறிவு தொடா்பான சாதக பாதகங்களை ஆராய நுண்ணறிவு இயக்கம்

ஒரு லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கடன்

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35 ஆயிரம் கோடி வங்கிக் கடன்

3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்

2024-25-ஆம் நிதியாண்டில் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு

மொத்த வருவாய் வரவு: ரூ.2,99,010 கோடி

மொத்த வருவாய் செலவினங்கள்: ரூ.3,48,289 கோடி

வருவாய்ப் பற்றாக்குறை: ரூ.49,279

2023-24-ஆம் நிதியாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை (திருத்த மதிப்பீடு): ரூ.44,907 கோடி

மூலதனச் செலவினம்: 2023-24: ரூ.42,532 கோடி

2024-25 திட்ட மதிப்பீடு: ரூ.47,681 கோடி

------------------

2024-25-ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய் வரவுகள் மீதான எதிா்பாா்ப்பு:

மாநிலத்தின் சொந்த வரி வருவாய்: ரூ.1,95,173 கோடி

(முத்திரைத் தாள்- பதிவுக் கட்டணம்: ரூ.23,370 கோடி

ஆயத்தீா்வை - ரூ.12,247 கோடி

வாகன வரிகள் - ரூ.11,560 கோடி

வணிகவரிகள் - ரூ.1,43,381 கோடி

இதர பிரிவுகள் - ரூ.4,615 கோடி

மொத்தம் - ரூ.1,95,173 கோடி

மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய்: ரூ.30,728 கோடி

மத்திய அரசிடமிருந்து உதவி மானியங்கள்: ரூ.23,354 கோடி

மத்திய வரிகளில் பங்கு: ரூ. 49,755 கோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com