திருநீர்மலை, திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் வசதி: பட்ஜெட்டில் அறிவிப்பு

திருநீர்மலை, திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் வசதி: பட்ஜெட்டில் அறிவிப்பு

திருநீர்மலை, திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: திருநீர்மலை மற்றும் திருப்பரங்குன்றம் திருக்கோவில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி ரூ.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழக நிதிநிலை அறிக்கையை பேரவையில் இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரவு தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக உரையை வாசித்து வருகிறார்.

அவர் அற்றிய உரையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த மூன்று ஆண்டுகளில் 1,290 திருக்கோவில்களில் திருப்பணிகள் நிறைவுபெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் பழனி, திருவண்ணாமலை, திருவரங்கம், சமயபுரம் உள்ளிட்ட 11 கோவில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை மற்றும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள திருக்கோவில்களுக்கு கம்பிவட ஊர்தி வசதி ரூ.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com