நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா விதை விநியோகம்: வேளாண் பட்ஜெட்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா விதை விநியோகம் செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா விதை விநியோகம்: வேளாண் பட்ஜெட்
Published on
Updated on
1 min read

சென்னை: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

உரையில், "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" மூலம் களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மண்புழு ஊரம் ஊக்குவித்தலுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் காடுகள் திட்டம் மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 ஊராட்சிகளக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆடாதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com