பொறியியல் பணி: திருச்சி - விழுப்புரம் இடையே நாளை ரயில்கள் ரத்து

ஈச்சங்காடு - மாத்தூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட சில ரயில்கள் புதன்கிழமை (பிப்.21) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

விழுப்புரம் : தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட ஈச்சங்காடு - மாத்தூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், குறிப்பிட்ட சில ரயில்கள் புதன்கிழமை (பிப்.21) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களின் போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.வினோத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட திருச்சி - விழுப்புரம் ரயில் பாதையில் அமைந்துள்ள ஈச்சங்காடு - மாத்தூர் இடையே பொறியியல் பணிகள் புதன்கிழமை (பிப்.21) மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் குறிப்பிட்ட சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் செல்லவுள்ளன.

நாளை(பிப்.21) முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

விருத்தாச்சலத்திலிருந்து காலை 6 மணிக்கு திருச்சிக்குப் புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 06891), திருப்பாதிரிப்புலியூரிலிருந்து காலை 6.05 மணிக்கு திருச்சிக்குப் புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06889), திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்குப் புறப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் (வண்டி எண் 20666), சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு திருநெல்வேலிக்குப் புறப்படும் வந்தே பாரத் விரைவு ரயில்(வண்டி எண் 20665), திண்டுக்கலிலிருந்து காலை 5 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 16868), விழுப்புரத்திலிருந்து மாலை 4.50 மணிக்கு மதுரைக்குப் புறப்படும் இண்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 16867) புதன்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு மதுரைக்குப் புறப்படும் வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டி எண் 12635), புதன்கிழமையன்று விழுப்புரம் - ஈச்சங்காடு இடையே 60 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

மாற்றுப் பாதையில் இயக்கம்:

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை 9.45 மணிக்குப் புறப்படும் குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண்16127) விழுப்புரத்திலிருந்து கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடையும். இந்த ரயில் கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூரில் நின்று செல்லும்.

குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண் 16128) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும். இந்த ரயில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கோப்புப்படம்
எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: விவசாயிகள் வேண்டுகோள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு மதுரைக்குப் புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் (வ.எண் 22671) விழுப்புரத்திலிருந்து கடலூர் துறைமுகம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி வழியாக செல்லும்.

மதுரையிலிருந்து கச்சிகுடாவுக்கு புதன்கிழமை காலை 5.30 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (வ.எண் 07192) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம், விழுப்புரம் வழியாக சென்னை சென்றடையும். இந்த ரயில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு காலை 5.30 மணிக்குப் புறப்படும் பல்லவன் அதிவேக விரைவு ரயில் (12606) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் வழியாக விழுப்புரம் வந்தடைந்து பின்னர் சென்னைக்குச் செல்லும். இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு காலை 6.40 மணிக்குப் புறப்படும் வைகை அதிவேக விரைவு ரயில் (வண்டி 12636) திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் வழியாக விழுப்புரம் வந்தடைந்து பின்னர் சென்னைக்குச் செல்லும். இந்த ரயில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com