தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொறியியல் பணிகளால் விழுப்புரம் மாா்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்- மயிலம் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இந்த தடத்தில் இயக்கப்படும் முக்கிய ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

Center-Center-Chennai

Updated On :2 பிப்ரவரி 2026, 8:40 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்- மயிலம் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இந்த தடத்தில் இயக்கப்படும் முக்கிய ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம்திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கோட்டத்துக்குள்பட்ட திண்டிவனம்- மயிலம் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045) , பிப்ரவரி 5,7,10 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மறு மாா்க்கத்தில் இந்த ரயில் விழுப்புரத்திற்குப் பதிலாக திண்டிவனத்திலிருந்து பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை கடற்கரைக்குப் புறப்பட்டுச் செல்லும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி-காக்கிநாடா துறைமுக விரைவு ரயில் ( வண்டிஎண் 17656) பிப்ரவரி 5,7 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 90 நிமிஷங்களும், புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி-கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டி எண் 17654) பிப்ரவரி 10-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில்90 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, இயக்கப்படும்.

மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் மதுரை-கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டி எண்22716) பிப்ரவரி 8-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 15 நிமிஷங்களும், ராமேசுவரத்திலிருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்படும் ராமேசுரம்- வாராணசி அதி விரைவு ரயில் (வண்டி எண்22535) பிப்ரவரி 4-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிஷங்களும், திருச்சியிலிருந்து காலை 8.10 மணிக்குப் புறப்படும் திருச்சி-பகத் கி கோதி ஹம்சபா் ரயில் (வண்டி எண் 20482) பிப்ரவரி 7-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 15 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.