விசிக 5 மாநிலங்களில் போட்டி: திருமாவளவன்

மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி 5 மாநிலங்களில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்(கோப்புப்படம்)
திருமாவளவன்(கோப்புப்படம்)

மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி 5 மாநிலங்களில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் போட்டியிடுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், தில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் விசிகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்க வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியது:

“தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் விசிக சார்பில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளோம். ஆகவே, விசிகவுக்கு சுயேட்சை சின்னத்தில் இருந்து பானை சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம்.

தொடர்ந்து, முன்னாள் குடியரசுத் தலைவரும், ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுத் தலைவருமான ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்றும், அதனைக் கைவிட வேண்டும் எனவும் விசிக சார்பில் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com