ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளிவரும்: இபிஎஸ்

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளிவரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி
Updated On :21 பிப்ரவரி 2024, 8:07 am

DIN

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளிவரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடுகள் செய்து வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு திமுக ஏற்கெனவே விருப்ப மனு விநியோகித்து வரும் நிலையில், அதிமுக இன்று காலை முதல் விருப்ப மனு விநியோகித்து வருகின்றது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசியது:

“திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நிறைவு செய்வதற்குள் கூட்டணிக் கட்சிகள் வெளியே வரும் பொறுத்திருந்து பாருங்கள். உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு அளித்துள்ளது. இனி யாரும் முடக்க முடியாது.

அதிமுக பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்காது. வாக்களித்து வெற்றி பெற வைக்கும் மக்களின் தேவையை நாங்கள் நிர்ணயிக்க வேண்டும். ஆனால், கூட்டணி என்று வரும்போது கூட்டணி தர்மம் வருகிறது. தேசிய அளவில் ஒரு முடிவை எடுக்கும் போது மாநிலத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால், அதிமுக சுயமாக முடிவெடுத்து செயல்படுவதற்காக தேசிய கட்சியின் கூட்டணியில் இடம்பெறவில்லை.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.