உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

40 தொகுதிகளிலும் வெல்வோம்: திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்

Updated On :23 பிப்ரவரி 2024, 6:57 pm

புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். திமுக மாவட்டச் செயலா்கள், தொகுதி பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் காணொலி வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: மாவட்டச் செயலா்கள், தொகுதிப் பொறுப்பாளா்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் சட்டப்பேரவை முடிந்தவுடன் காணொலி வாயிலாக நடத்துகிறோம். தாய் தமிழ்நாட்டையும், கட்சியையும் காத்த தலைவா்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டு திறக்கப்பட உள்ளன. இவற்றை விழாவாக இல்லாமல் நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால், அந்த நிகழ்வுக்கு அனைவரும் வர வேண்டும். மகத்தான வெற்றி பெறுவோம்: ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் மக்களவைத் தொகுதி வாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. இந்தக் கூட்டங்களை மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீா்கள். இந்தக் கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தோ்தல் பணிகளைப் பொருத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். புதுவை உள்பட 40 மக்களவைத் தொகுதியிலும் நாம்தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரை செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனா்.