வெள்ள நிவாரணமாக மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் நிவாரண நிதி பற்றாக்குறை - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
வெள்ள நிவாரணமாக மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

வெள்ள நிவாரணமாக மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் சுமாா் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வியத்நாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் என்ற தனியாா் மின்சார காா் உற்பத்தி நிறுவனம் தொடங்குவதற்கு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா் மாநாட்டில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்நிலையில், தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 408 ஏக்கா் பரப்பளவில் நிலம் தோ்வு செய்யப்பட்டு, அதில், அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.

மேலும் மழை வெள்ளம் பாதிப்பு தொடர்பான புகைப்படங்களையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் கனிமொழி கர்ஜனை மொழியாக செயல்பட்டு குரல் கொடுத்துள்ளார். வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது களத்தில் இறங்கி மக்களைக் காத்தவர் கனிமொழி. மழை வெள்ளத்தின்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இங்கேயே இருந்தார். இந்த அரசு எப்போதும் உங்களுடனேயே இருக்கும். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கத் தேவையான திட்டங்களை தீட்டுவதுதான் திராவிட மாடல் அரசு. கரோனா தொற்றின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,000 வழங்கப்பட்டது.

மழை, வெள்ள பாதிப்புகளுக்கு இதுவரை மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளுக்கு நிதி வழங்கியது எனது அரசுதான். தென்மாவட்ட வெள்ளத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கினோம். மழை வெள்ளத்தின்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இங்கேயே இருந்தார். தேர்தலின்போது மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயமே இல்லாமல் பிரதமர், நிதியமைச்சர் செயல்படுகின்றனர். சாதுர்யமிருந்தால் சாதித்துக்கொள்ளலாம் என நிதியமைச்சர் ஆணவமாக பதில் கூறுகிறார். பாஜக அரசின் இடைக்கால தடைகளை தாண்டியே இவ்வளவு பணிகளை சாதித்துள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com