மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு எதுவுமே செய்யவில்லை: பிரதமர்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி பாடுப்படவில்லை.

News image
பல்லடத்தில் பிரதமர் மோடி உரை
Updated On :27 பிப்ரவரி 2024, 11:22 am

DIN

தமிழ்நாட்டில் காங்கிரஸ்-திமுக கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் இன்று (பிப். 27) நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

தமிழகத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ்-திமுக கூட்டணி பாடுப்படவில்லை, எதுவுமே செய்யவில்லை. இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்ஜிஆரை நினைத்துப் பார்க்கிறேன். ஏழைகளுக்குக் கல்வி, மருத்துவ வசதி செய்து கொடுத்தவர் எம்ஜிஆர். அதனால் தான் அவர் இன்றும் நினைத்துப் பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்தவகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

தமிழகத்தில் திமுகவால் அரசியலுக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்படும் கட்சி என்றால் பாஜக தான் என்று பிரதமர் மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.