தமிழ்நாட்டிற்கு 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி திட்டங்கள்: எல். முருகன்

தமிழ்நாட்டிற்கு 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார் என்று எல். முருகன் கூறியுள்ளார்.
எல். முருகன்
எல். முருகன்

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று ரூ.17,300 கோடியில் திட்டங்கள் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய இணையமைச்சர் எல். முருகன், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி பல்லாயிரக்கணக்கான மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கி வைக்கிறார்.

இன்ற நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.17,300 கோடியில் திட்டங்கள் தொடங்கி வைக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com