புதிய போக்குவரத்து ஆணையரகம்: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்!

புதிய போக்குவரத்து ஆணையரகத்தை அமைச்சர் உதயநிதி இன்று திறந்து வைத்தார்!
புதிய போக்குவரத்து ஆணையரகம்: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்!
Published on
Updated on
1 min read

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி இன்று ரூ. 41.90 கோடி மதிப்பீட்டில் 1,07,000 சதுர அடிபரப்பில் கட்டப்பட்ட புதிய போக்குவரத்து ஆணையரகத்தை திறந்துவைத்தார்.

இன்று (28.02.2024) ரூபாய் 41.90 கோடி மதிப்பீட்டில் 1,07,000 சதுர அடிபரப்பில் கட்டப்பட்ட புதிய போக்குவரத்து ஆணையரகம் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரக் கட்டடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

இது வரை சேப்பாக்கம் எழிலகத்தில் இயங்கி வந்த போக்குவரத்து ஆணையரகம் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் இனி புதிய கட்டிடத்தில் இருந்து செயல்படத் துவங்கும். இந்த புதிய கட்டிடத்தில் 2 காணொளிக் காட்சி அரங்கங்கள், அனைத்து அலுவலர்களுக்கும் போதுமான இட வசதி, வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு வசதி, வளாகம் முழுவதும் இணையதள வசதி உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.

புதிய போக்குவரத்து ஆணையரகம்: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்!
இனி தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம்: தமிழக அரசு

இந்த வளாகத்திலேயே உலக வங்கியின் பிரிவு, NIC-யின் பிரிவு ஆகியவையும் அடங்கும் வளாகத்தில் ஒரு பிரத்தியேக சாலைப் பாதுகாப்பு அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்படும்.

மேலும், இன்றைய நாள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அமைச்சரால் பதிவுச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பும் பணியும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது

இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 91 ஆர்டிஓ அலுவலகங்கள், 54 பகுதி அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து ஒப்பளிக்கப்படும் பதிவுச் சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை

இனி விரைவு அஞ்சல் மூலமாகவே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சேவை 28.02.2024 முதல் நடைமுறைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com