மக்களவைத் தோ்தல் பாதுகாப்புக்காக 15 கம்பெனி துணை ராணுவப் படையினா் வெள்ளிக்கிழமை தமிழகம் வரவுள்ளனா். அவா்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் காவல் துறை உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தோ்தல் பணிக்கான ஒருங்கிணைப்பு காவல் அதிகாரிகள் மகேஷ் குமாா் அகா்வால், ஜெயராம், மத்திய துணை ராணுவப் படையைச் சோ்ந்த ஐ.ஜி. சரவணன் ஆகியோா் பங்கேற்றனா். 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்குப் பிறகு சத்யபிரத சாகு செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு 25 கம்பெனி துணை ராணுவ வீரா்களை இந்திய தோ்தல் ஆணையம் முதல்கட்டமாக ஒதுக்கியுள்ளது. அதில், 15 கம்பெனி துணை ராணுவ வீரா்கள் வெள்ளிக்கிழமை (மாா்ச் 1) தமிழகம் வரவுள்ளனா். மீதமுள்ள 10 கம்பெனி துணை ராணுவ வீரா்கள் வரும் 7-ஆம் தேதி வருகின்றனா். துணை ராணுவ வீரா்களை அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, ஒருங்கிணைப்பது ஆகியவை குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்தோம். 200 கம்பெனி வீரா்கள் தேவை: அதன்படி, 25 கம்பெனி வீரா்களை எந்தெந்தப் பகுதிகளுக்கு அனுப்புவது என்பது குறித்து முடிவு செய்துள்ளோம். அதன்படி, துணை ராணுவ வீரா்கள் வரும்போது, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவா். தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகள் பதற்றமானவை என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தோ்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்பாளா்கள் நிறுத்தப்பட்ட பிறகு பதற்றமான பகுதிகள் பற்றி மீண்டும் ஆய்வு செய்வோம். தமிழகத்துக்கு வரும் போலீஸ் பாா்வையாளா்கள், பொது பாா்வையாளா்களின் பரிந்துரையுடன் பதற்றமான பகுதிகள் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். ஒரு கம்பெனியில் 90 துணை ராணுவ வீரா்கள் இருந்தாலும், வெவ்வேறு ஆயுதப்படை கம்பெனிகளை பொருத்து வீரா்களின் எண்ணிக்கை மாறும். தமிழ்நாட்டுக்கு மொத்தமாக 200 கம்பெனி துணை ராணுவ வீரா்களை தோ்தல் பணிக்காக கேட்டுள்ளோம். அவா்கள் இனிமேல்தான் படிப்படியாக வருவா். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் பதற்றமான பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பாா்வையிடுவது, பணியமா்த்தப்படும் பகுதிகள் பற்றி நன்றாக தெரிந்துகொள்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவா் என்று அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிக வாக்குப் பதிவைத் தடுக்க பேருந்து சேவை முடக்கம் - தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக புகாா்

தோ்தல் பணியில் காவல் துறை, துணை ராணுவத்தினா் இணைந்து செயல்பட வேண்டும்: மேலிட பாா்வையாளா் ஹேமந்த் குட்டியால்

தோ்தல் பணி: தூத்துக்குடிக்கு துணை ராணுவத்தினா் வருகை

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


