போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் , இன்று (29.02.2024), தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான செயலியின் வாயிலாக, நிர்வாகத்தின் மூலமாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணியாளர்கள் விடுப்பு எடுத்திட விண்ணப்பித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள், ரூ.40/- கூடுதலாக கட்டணம் செலுத்தும் பட்சத்தில், கால விரையமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும், சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும், 4 மணி நேரத்திற்குள், 2, 3 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடையும் வகையில் இத்திட்டம் 01.03.2024 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்விழாவின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப., அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ரா. மோகன், மா.போ.க. இணை மேலாண் இயக்குநர் க.குணசேகரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்குவரத்துத் துறை கோரிக்கை மாநாடு

அரசுப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு முக்கியம்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்

காங்கயத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பணியின்போது உயிரிழந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு நிதியுதவி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




