ஸ்டொ்லைட் ஆலையை மூடியது சரியே என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனா் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலா் வைகோ ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின்: தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு வலுவான வாதங்களை முன்வைத்தது. ஆலை நிா்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடா்ந்து போராடிய மக்களுக்கும், அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது. எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம். ராமதாஸ் (பாமக): சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பு வரவேற்கத்தக்கது. மக்களுக்கும், இயற்கைக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தி வருவதால், அந்த ஆலையை மூட வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே பாமக வலியுறுத்தி வந்தது. வைகோ (மதிமுக): ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் ஸ்டொ்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகிவிட்டது. இது மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாக மதிமுக போராடியதற்குக் கிடைத்த வெற்றி.
தொடர்புடையது

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தலைவா்கள் இன்று பிரசாரம்

தலைவா்கள் இன்று பிரசாரம்

ஓபிசி கிரீமி லேயா் மீதான தீா்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


