புதியதோர் உலகம் செய்வோம்: பாரதிதாசன் பல்கலை.யில் பிரதமர் மோடி உரை

புதியதோர் உலகம் செய்வோம் என்று பாரதிதாசனின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர  மோடி உரையாற்றினார்.
புதியதோர் உலகம் செய்வோம்: பாரதிதாசன் பல்கலை.யில் பிரதமர் மோடி உரை


திருச்சி: புதியதோர் உலகம் செய்வோம் என்று பாரதிதாசனின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர  மோடி உரையாற்றினார்.

புது தில்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடியை திருச்சி விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலை 10.30 மணியளவில் 38-ஆவது பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் பங்கேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு சுவாமி சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசளித்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்க உரையாற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி, விழா பேருரையாற்றினார்.

அப்போது, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு வந்த முதல் பிரதமர் நான்  என்பதும், புத்தாண்டில் முதல் நிகழ்ச்சியாக இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றதும் மகிழ்ச்சி. பண்டைய காலத்தில் காஞ்சி, மதுரை. கங்கைகொண்டசோழபுரம் போன்ற நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின. வரலாற்றில் பல மாற்றங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் மாணவர்கள்.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. புதியதோர் உலகம் செய்வோம் என்று பாரதிதாசன் கூறினார். நீங்கள் கற்ற கல்வி விவசாயிகளுக்கும், வேளாண்மைக்கும் கை கொடுக்க வேண்டும். கல்வி அறிவியலுடன் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கினால் நாடும் சிறந்து விளங்கும்.

இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையோடு பார்க்கின்றன. பட்டம் பெற்றதுடன் உங்கள் கல்வி நின்றுவிடுவதில்லை. நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றார். பிரதமர் மோடி பேசும்போது அடிக்கடி, எனது மாணவ குடும்பமே என்ற தமிழ் வார்த்தைகளை அவ்வப்போது பயன்படுத்தினார்.

மேலும், இந்தியாவை உலக நாடுகள் புதிய நம்பிக்கையோடு பார்க்கின்றன. பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கினால் நமது நாடும் சிறந்து விளங்கும். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சாதனை படைத்து வருகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்நிகழ்ச்சியை நிறைவு செய்து கொண்டு, பிரதமா் நரேந்திர மோடி, நண்பகல் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சென்று புதிய முனையத்தை திறந்து வைக்கிறாா். மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து, பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். இந்த இரண்டு விழாக்களிலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய, மாநில அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com