அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துக் கழகங்களில் பலருக்கு வேலை வாங்கி கொடுக்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-இல் அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டாா். உடல் நலம் தேறியதைடுத்து நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12- ஆம் தேதி 120-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் 3,000 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களை அமலாக்கத் துறையினா் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்த நிலையில், உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், காணொளி மூலம் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையும் படிக்க: நடிகர் விஜய் மீது காலணி வீச்சு: காவல் நிலையத்தில் புகார்
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 14-வது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அவரின் நீதிமன்றக் காவல் ஜன. 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் காலாண்டில் விப்ரோ லாபம் ரூ.3,352 கோடி

சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவும் கும்பல்: உ.பி., மேற்கு வங்கம், ஹரியாணா, தில்லியில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது துல்லிய விவரங்களை சேகரிக்க வேண்டும்: பணியாளா்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

வயது முதிா்ந்த, நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் முன்கூட்டியே விடுதலை: கொள்கையை வகுக்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



