பொங்கல் பரிசுத்தொகுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பாக புகார்களை தெரிவிக்க தனி தொலைபேசி எண்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பாக புகார்களை தெரிவிக்க தனி தொலைபேசி எண்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பாக புகார்களை தெரிவிக்க தனி தொலைபேசி எண்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அதாவது, பொங்கல் பரிசு தொகுப்பை உரிய முறையில் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகத்தை கண்காணிக்க தொடர்பு அலுவலர்களை நியமித்து பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்ய மாவட்டம் மற்றும் வட்டார வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உதவி ஆணையர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட வேண்டும்.

கரும்பை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க மாவட்ட வாரியாக கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும். மேலும் 1967, 1800 425 5901 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com