திருக்கழுக்குன்றத்தில் சித்தர்களின் அபூர்வ கிரிவலம்!

திருக்கழுக்குன்றத்தில் சித்தர்களின் அபூர்வ கிரிவலம் சனிக்கிழமை நள்ளிரவு 1.45 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை வரை நடைபெற்றது.
திருக்கழுக்குன்றத்தில் சித்தர்களின் அபூர்வ கிரிவலம்!
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றத்தில் சித்தர்களின் அபூர்வ கிரிவலம் சனிக்கிழமை நள்ளிரவு 1.45 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை வரை நடைபெற்றது.
 
திருக்கழுகுன்றத்தில் அகத்திய கிருபா ஸ்ரீ அன்புச் செழியன் தலைமையில் சித்தர்களின் அபூர்வ  கிரிவலம் நடைபெற்றது.
 
ஸ்ரீ மஹாகுரு அகத்திய பெருமானின் அருளாசியில், செங்கல்பட்டு மாவட்டம், பஷீதீர்த்தம் என்றழைக்கப்படும் திருக்கழுகுன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் திருமலையில் சித்தர்கள் கிரிவலம் உலக நன்மைக்காக நடைபெறுகிறது.


 
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய மலைகளாக இருக்கப் பெற்றதான வேத மலையில் உள்ள  வேதகிரீஸ்வரர் பெருமானை சித்த மஹா புருஷர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வணங்கி செல்லும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

உலக நன்மைக்காக பணியாற்றும் திருக்கழுகுன்றம் அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன்  தலைமையில் நடைபெற்ற சித்தர்கள் அபூர்வ கிரிவலத்தில் வேதகிரீஸ்வரின் பெருமைகள் குறித்து அகத்திய கிருபா ஸ்ரீ அன்புச் செழியன் அருளுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் சித்தர்களின் மந்திரங்களை வேதபாடசாலை சிவாச்சாரியார்கள் ஒலிக்க பக்தர்களும் ஒலித்தனர். மகா தீபாராதனையுடன் சித்தர்களின் அபூர்வ மௌன  கிரிவலம் சனிக்கிழமை நள்ளிரவு 1.47  தொடங்கியது 
 
இந்த சித்தர்களின் அபூர்வ கிரிவலத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், கூடுவாஞ்சேரி, மதுராந்தகம் ,சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  மௌனமாக கிரிவலம் வந்தனர்.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

நடக்க முடியாதவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள்  கூட நடத்து வந்தது அவர்களுக்கே வியப்பளிபதாக தெரிவித்தனர். கிரிவலத்தில் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் ஆர். டி. மணி , கமல்ஹாசன், உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com